Welcome to Our Alumni Community
Sokkampalayam Gandhiji Government Higher Secondary School Alumni Trust - Connecting generations of excellence .
Our Legacy
started with potential
Alumni Network
1200+ alumni across various fields
Giving Back
Supporting students through 100% Education and for School Basic Infrastructure
About Our Alumni Trust
Our History & Mission
ஜெய்ஹிந்த் (Jai Hindhusthan Ki) இந்தியாவாழ்க! முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை அமைவிடம்: கோயமுத்தூர் முதல் சத்தியமங்கலம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 33 வது கிலோமீட்டரில் அன்னூர் என்கின்ற நகரின் (அன்னூர் தாலுகா) தெற்கே 3 வது கிலோமீட்டரில் அமைந்துள்ளதும்,விடுதலை போராட்டத்தில் பங்கேற்று மாபெரும் தியாகங்களைச் செய்தும் வாழ்ந்தும் மறைந்த தியாகிகள் வாழ்ந்த ஒரு புண்ணிய கிராமம் தான் சொக்கம்பாளையம். தேசியத்தில் பங்கேற்பு: சொக்கம்பாளையம் என்னும் கிராமத்தில் தேசவிடுதலைக்காக பாடுபட்டவர்களில் முக்கியமானவர்களில் முதன்மையானவர்களான 1.தியாகி வெ.சீனிவாசராவ் 2. தியாகி ர.பெட்டையன் 3. தியாகி தி.சி.சின்னையன் 4.தியாகி ஆ. மாசிலாமணி 5. தியாகி சீ. சோனாபாய் ஆவர் . இதில் தன் இளமைப் பருவம் முதல் பல ஆண்டுகள் வாழ்ந்து பின்னாளில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் பெரியநாயக்கன்பாளையம். (கோயம்புத்தூர் முதல் மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் பெரியநாயக்கன்பாளையம் (சுமார் 18 கிலோ மீட்டர்)). பெரியநாயக்கன்பாளையம் என்னும் இடத்தில் வசித்து மறைந்த தியாகி வெ.சீனிவாசராவ் மற்றும் இவரது துணைவியார் திருமதி.தியாகி சீ.சோனாபாய் ஆகிய இருவரும் 1931ஆம் வருடம் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று ஆறு மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்துள்ளனர்.மேலும் 1939ஆம் வருடம் தனிநபர் சத்தியாகிரக போராட்டத்தில் தியாகி ர.பெட்டையைன் கலந்து கொண்டு சிறை சென்றார். மேலும் 1942-ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற போராட்டத்திலும், தியாகி.ர.பெட்டையன், தியாகி தி.சி.சின்னையன், தியாகி அ.மாசிலாமணி ஆகிய மூவரும் கலந்து கொண்டு சிறை தண்டனை அனுபவித்தனர். மேலும் இந்த காலகட்டங்களில் நாட்டில் ஆங்கிலேயர்களின் அடக்குமுறை அரசாங்கத்தின் ஆட்சி கொடூர தாண்டவம் ஆடியது. மேலும் இவர்களுடன் இணைந்து சேவையாற்றிய அனைவரையும் மேற்படி அடக்கு முறையால் இந்த சொக்கம்பாளையம் கிராமத்திற்கு ரிசர்வ் போலீஸ் படை வரவழைக்கப்பட்டு தடியடி பிரயோகம் செய்து பலரது மண்டை உடைந்து கை கால்கள், மற்றும் உடலில் மிக பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்தம் சிந்தி உள்ளார்கள். எனவே இந்த ஊரில் உள்ள அனைவருமே சுதந்திரப் போராட்ட தியாகிகள் தான் என்று சொன்னால் மிகையாகாது. தேசிய சேவா சங்க தோற்றம்: 1939 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் ஆறாம் நாள் (06/02/1934) அன்று காந்தியடிகளின் பொற்பாதம் பட்டதின் நினைவின் சுவடாக 1936 ஆம் வருடம் 11 உறுப்பினர்களுடன் உதயமானது தான் தேசிய வாலிபர் சங்கம். இதன் ஆரம்ப கால சங்கத்திற்கு பாடுபட்டவர்கள் மற்றும் ஊர் பெரியோர்களான 1. திரு.எஸ்.ஜி.கிருஷ்ணன் 2. திரு.எஸ்.ஆர்.கரி அண்ணன் 3. திரு.தி.சி சின்னையன் 4. திரு.க. ரங்கையன் 5. திரு.சீ.ராமசாமி 6. திரு.தொ.மா கரி அண்ணன் 7. திரு.எஸ்.என்.கரியண்ணன் 8. திரு.எம்.ராமசாமி 9. திரு.என்.எஸ்.ரங்கசாமி 10. திரு.எஸ்.என்.மாசிலாமணி 11. திரு.டி.எம்.திருமலை ஆகியோரால் தேசிய வாலிபர் சங்கம் உருவாக்கப்பட்டது.இந்த தேசிய வாலிபர் சங்கம் தான் நிர்வாக காரணத்திற்காக 1938 ஆம் வருடம் தேசிய சேவா சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 1939 ஆம் வருடம் பதிவு எண் 7/1939-40 நாள் (27.11.1939) பதிவு செய்யப்பட்டது. இச்சங்கத்திற்கு அப்போதைய கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம் மற்றும் கோவை அவிநாசிலிங்கம் மனையியல் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனருமான திரு.தி.சு.அவனாசிலிங்கம் (1946 முதல் 1949 திரு.தி.சு.அவனாசிலிங்கம் அவர்கள் அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சியில் கல்வி அமைச்சராக பணியாற்றினார்) அவர்கள் போஷகராக இருந்து வழிகாட்டி மேற்படி சங்கத்தினை வழிநடத்தினார். தேசிய சேவா சங்கத்தின் பணிகள்: 1. சுற்றுச்சூழல் 2. சமூக நல முன்னேற்றம் 3. கல்வி சேவை சுற்றுச்சூழல்: கிராமங்களை சுத்தம் செய்ய அப்போதைய காலகட்டங்களில் ஆட்கள் நியமிக்கும் வழக்கம் கிடையாது. எனவே மேற்படி சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுடன் (தற்போதைய சமூக நல காலணிகளில் உள்ள அனைத்து வீதிகளிலும்) திருப்பராய்த்துறை மட சுவாமி சித்பவானந்தா, கோவை வித்யாலய நிறுவனர் திரு.தி.சு.அவனாசிலிங்கம், தியாகி சீனிவாசராவ். ஆகியோர்களுடன் இணைந்து சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்க ளும் சேர்ந்து சுத்தம் செய்து வந்தனர். சமூகநல முன்னேற்றம்: தற்போதைய சமூக நல காலணியில் உள்ள மக்களுக்கும் அப்போது சரியான குடியிருப்பு வசதிகள் இல்லாமையால் தியாகி ர.பெட்டையன் அவர்கள் 1952 ஆம் வருடம் பொதுமக்கள் உதவியுடனும், அரசாங்கத்தின் உதவியுடனும், இரண்டு ஏக்கர் பூமியை வாங்கி அதில் 41 வீடுகள் ஆரம்ப கால கட்டங்களில் கட்டி முடித்து வழங்கப்பட்டது. மேலும் தியாகி ர.பெட்டையன் அவர்களின் தீவிர முயற்சியின் காரணமாக 1994 ஆம் வருடம் அரசு நிதி உதவியுடன் 3.5 லட்சம் செலவில் 35 கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. இதற்கு தியாகி.சி.சின்னையன் காலனி என பெயரிட்டு வழங்கப்பட்டுள்ளது. கல்வி சேவையில்: கல்வி அறிவு இல்லை எனில் நமது சமூக மக்களுக்கு எந்தவித முன்னேற்றமும் கிடைக்கப் பெறாது என்ற உயர்ந்த நோக்குடன் ஒரு ஆரம்பபாடசாலை உருவாக்கப்பட வேண்டும் என்ற உயர் இலட்சியத்தின் வெளிப்பாடக அப்போது சொக்கம்பாளையத்தில் இயங்கி வந்த லண்டன் மிஷன் ஆரம்பப் பாடசாலையை நிறுத்திவிட்டு தேசிய சேவா சங்கத்தின் பெயரால் 1940 ஆம் வருடம் அப்போதைய அரசின் முறையான அங்கீகாரம் பெறப்பட்டு 9 ஆசிரியர்களுடன் ஆரம்ப பாடசாலையாக தொடங்கப்பட்டது. மேற்படி பாடசாலை பின்னாளில் 300 மாணவ மாணவிகளுடன் உயர் தொடக்கப் பள்ளியாக மாறியது. மேற்படி பாடசாலைக்கு அதற்குரிய கட்டிடங்கள் இல்லாததால் பொதுமக்கள் ஒத்துழைப்புடனும் அரசு ஆதரவுடனும் தேசிய சேவா சங்கத்தின் நிர்வாகிகள் தியாகி.திரு.எஸ்.ஜி.கிருஷ்ணன், தியாகி.எஸ்.ஆர்,கரியண்ணன், தியாகி.தி.சி.சின்னையன், தியாகி.ர.பெட்டையன் மற்றும் சங்க உறுப்பினர்களின் தீவிர முயற்சியினாலும் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. மேலும் பள்ளி கட்டிடத்தை அப்போதைய சென்னை மாகாண கல்வி அமைச்சராகவும் சங்கத்தின் போஷகராகவும் இருந்த உயர்திரு தி.சு.அவிநாசிலிங்கம் ஐயா அவர்களின் திருகரங்களால் 28/12/1947 ஆம் வருடம் திறக்கப்பட்டது. தேசிய சேவா சங்கத்திற்கு உள்ளூர் பெரியவர் உயர்திரு.சிக்கன்ன செட்டியார் அவர்கள் 5 ஏக்கர் பூமியை நன்கொடையாக கொடுத்துள்ளார்கள். மேலும் தேசிய சேவா சங்கமும்,சொக்கம்பாளையமும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தியாகி.ர.பெட்டையன் அவர்களின் தீவிர முயற்சியால் கோவை திரு.பி.எம்.நஞ்சையன் அவர்களை தலைவராக கொண்டு காந்தி நினைவாலயம் கமிட்டி எனும் அமைப்பு துவங்கப்பட்டது. மேற்படி அமைப்பின் தீவிர முயற்சியின் காரணமாக கொண்டுவரப்பட்டது தான் தற்போதைய "காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி". இப்பள்ளிக்காக தேசிய சேவா சங்கத்திற்கு சொந்தமான ஆரம்ப பாடசாலை அமைந்திருந்த (அப்போது ஒரு கோடி மதிப்பு தற்போது சில கோடிகள்). இடத்தையும் மற்றும் கட்டிடத்தையும் (அப்போதைய மதிப்பு சுமார் ஐந்து கோடி தற்போதைய மதிப்பு சில பல கோடிகள்). மதிப்புள்ள 5 ஏக்கர் பூமியையும் நன்கொடையாக தேசிய சேவா சங்கம் காந்தி நினைவாலய கமிட்டியினரால் வழங்கப்பட்டது. இதன் பொருட்டு ஆரம்ப பாடசாலைக்கு கட்டிடம் இல்லாத சூழ்நிலை மீண்டும் உருவானது இதனால் ஆரம்ப பாடசாலையை உள்ளூரில் உள்ள திருமண மண்டபத்திலும் செல்வ விநாயகர் கோவிலிலும் வகுப்புகள் நடந்து வந்தன. அதனால் தியாகி.ர.பெட்டையன் அவர்களின் தீவிர பெரும் முயற்சியின் காரணமாக ஆன்றோர்கள் மற்றும் சான்றோர்களின் நிதி பங்களிப்புடன் அன்றைய மதிப்பில் சுமார் 2 லட்சம் செலவில் 1988 ஆம் வருடம் ஒரு பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. தற்போது இப்பள்ளியில் சுமார் 100 மாணவ மாணவியர்களுடனும், நான்கு ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளருடனும் மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டுள்ளது. தியாகி.ர.பெட்டையன்: தியாகி.ர.பெட்டையன் அவர்களின் அதிதீவிர முயற்சியாலும் அவர் போஷகராக இருந்த காந்தி நினைவாலய கமிட்டியினராலும்,தேசிய சேவா சங்கத்தாலும் சொக்கம்பாளையத்தில் காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி, நூல் நிலையம், காந்தி கஸ்தூரிபா நினைவு மண்டபம், [தற்போது இந்த மண்டப வளாகத்தில் தான் முன்னாள் மாணவ மாணவியர் 1940 ஆம் வருடம் முதல் இன்று வரை உள்ள அனைவரையும் உள்ளடக்கிய சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி ஜி.ஜி.எச்.எஸ்.எஸ் அறக்கட்டளை என்ற அமைப்பின் அலுவலகம் இயங்கி வருகிறது] காந்தியடிகளின் முழு உருவச் சிலை உடன் கூடிய மணிமண்டபம், காந்திஜி அருங்காட்சியகம், நூற்ப்பு நிலையம், ஆயில் சொசைட்டி, ஐந்து அரசு மாணவ மாணவியர் விடுதிகள், அரசுடமையாக்கப்பட்ட வங்கி, குழந்தைகள் காப்பகம், தாய் சேய் நல நிலையம் ஆகியவைகள் ஏற்படுத்தப்பட்டன. தேசிய சேவா சங்க செயல்பாடுகள்: 1. சேவா சங்கத்தின் சார்பாக 1944 ஆம் வருடம் ஏழு நாட்கள் சமரச சன்மார்க்க பயிற்சி முகாம் . 2. 1962 ஆம் வருடம் வெள்ளி விழா 3.1964 ஆம் வருடம் ஜவஹர்லால் நேரு அவர்களின் மறைவை ஒட்டி அவரது அஸ்தி கரைக்கப்பட்ட போது அன்னதானம். 4. 1993 ஆம் வருடம் தேசிய சேவா சங்கத்தின் பொன்விழா. 5. 1993 வருடம் தியாகி ர.பெட்டையன் அவர்கள் எழுதிய ‘என் சுதந்திர போராட்ட வாழ்க்கையும் காந்திய நிர்மாண பணிகளும்’ என்ற நூல் அப்போதைய மகாராஷ்டிரா ஆளுநர் உயர்திரு.சுப்பிரமணியன் அவர்களைக் கொண்டு பொன்விழா மலராக வெளியிடப்பட்டது. 6. 1993 ஆம் வருடம் ஆகஸ்ட் புரட்சி பொன்விழா நினைவு கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 7. 1997 ஆம் வருடம் பொன்விழா நினைவு கட்டிடம் அப்போதைய மத்திய அமைச்சர் திரு.எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 8. சொக்கம்பாளையத்திற்கு மகாத்மா காந்தியடிகள் விஜயம் செய்ததன் [06/02/1934] நினைவாக 75 வருடத்தின் நிறைவு பவள விழா, மற்றும் தேசிய சேவா சங்கம் துவக்கப்பட்டதன் பவள விழா, தேசிய சேவா பள்ளி துவக்கப்பட்டதன் பவள விழா ஆகிய முப்பெரும் விழாக்களாக (06/02/2011) அன்று நடைபெற்றது. 9. மகாத்மா காந்தியடிகள் வருகை தந்ததன் 90 ஆம் வருடம் நினைவு நாள் (06.02.2024) இதனை முன்னிட்டு (03.03.2024) அதன் பொருட்டு நினைவு விழாவாக கொண்டாடப்பட்டது. மேற்கண்ட தகவல்கள் அனைத்தையும் தந்து உதவியவர் உயர்திரு.ஆர்.திருவேங்கடம் செயலாளர், வித்யாசாலை துவக்கப்பள்ளி, தேசிய சேவா சங்கம், சொக்கம்பாளையம். காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி: (12/07/1977) ஆம் வருடம் நடுநிலைப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு பின்னாளில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மீண்டும் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுள்ளது. தற்போது ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் மொழியிலும், ஆங்கில மொழியிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. சொக்கம்பாளையத்தில் (27/11/1939) ஆம் வருடம் பதிவு செய்யப்பட்டு அன்று முதல் இன்று வரை தேசிய சேவா சங்க பள்ளியிலும் மற்றும் இன்று வரை உள்ள காந்திஜி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பயின்ற முன்னாள் மாணவர்கள் இணைந்து "சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை" என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த அமைப்பை சட்டரீதியான -------ஆம் வருடம் ------ எண்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
Our mission is to foster lifelong connections, support current students, and contribute to the development of our school and community.
1200+
Alumni Members
50+
Years of Excellence
200+
Cultural Awards
20+
Events
Events
Stay updated with us
Photo Gallery
Memorable moments from our Alumni Community
Our Alumni Event-August 15th 2025
Our Executive Committee
Meet the dedicated alumni managing our trust activities
Kathirvel.S
Kathirvel.K
Sekar.R
Kannan.V
Vijayakumar.S
Vijayakumar.C
Parameshwaran
Prabhu
Mohanapriya.M
Contact Us
Get in touch with us for any inquiries or to join our network
Send us a Message
Get In Touch
Address
Sokkampalayam GGHSS Alumni Trust
S.F.No:619/1B,619/2A,Gandhi Kasthuri Bhai Ninaivalaya Valagam,Sokkampalayam
Annur Taluk,Coimbatore Dt,Tamilnadu,India-641653.
Contact Information
+91 8870210618
will be updated
www.gghss.in
Follow Us
Office Hours
Monday - Friday: 10:00 AM - 5:00 PM
Saturday: 10:00 AM - 05:00 PM
Sunday: Closed